Tuesday, November 4, 2008

தேர்தல்

நான் இதுவரை ஒட்டு போட்டது இல்லை, எனக்கு இதை சொல்ல அசிங்கமாக தான் இருக்கு. அதுக்காக எனக்கு 18 வயசுன்னு நினைசிறாதிங்க. ஏழு கழுதை வயசு ஆயிருச்சி. ஆனா கையில் மை இட்டது இல்லை. சென்னையில் கல்லூரியில் கனவு வாழ்கை வாழும் பொது என்னை அறியாமல் 18 வயது என்னை தாண்டி சென்றது. பின் பிழைப்புக்காக ஹைதராபாத் வந்தபோதும் அடுத்த தேர்தலையும் விட்டு விட்டேன். வாட்காளர் அடையாள அட்டைக்காக பதிவு செய்து ஓர் ஆண்டு காலம் முடிஞ்சாச்சு, ஒன்னும் வந்த பாடு இல்லை. இப்பொழுது என்னை நாடு கடத்தி இருப்பதால், என்னால் மீண்டும் பதிவு செய்ய இயலாது.

இன்று அமெரிக்காவில் தேர்தல் , எதற்காகவும் 8 மணி நேர உழைப்பை தவற விடாதவர்கள் இதற்காக தாமதமாக அலுவலகத்திற்கு வந்தது என்னை அசிங்க பட வைத்தது. எனக்கு என்ன தகுதி இருக்குது நம் நாட்டை பத்தியோ , நம் அரசியல் வாதிகளை பத்தியோ பேச. என் கடமையை நான் செய்ய வில்லை. ஏன் அமெரிக்க மாதிரி அஞ்சல் வழி ஒட்டு நமக்கு குடுக்க கூடாது :-(