Friday, October 24, 2008

Pollution

நண்பர் ஒருவர் blog ல கேட்டு இருந்தார், நீங்க அமைச்சர் ஆனா என்ன பண்ணுவீங்க? நான் யோசிக்கும் பொது தான் தெரியுது இது வரை இதை பற்றி நான் ரெம்ப தெளிவா யோசிச்சது இல்லைன்னு.

என்னை ரெம்ப யோசிக்க கஷ்டப்பட வச்சது இந்த pollution தாங்க. சென்னை கிண்டி யில் இருந்து கோயம்பேடு போறதுக்குல நம்ப மேல ஒரு கருப்பு லேயர் படிஞ்சிடும் (makeup எல்லாம் waste) எவளவு புகை, எவளவு மாசு , எவ்வளவு நெரிசல்.

நான் ஹைதராபாத் ல இருந்த போது அங்கு அடிகடி சாலை ஓரங்களில் மாசு கட்டுப்பட்டு நிறுவனம் வண்டி இருக்கும். போற வர வண்டி எல்லாம் நிறுத்தி test பண்ணி ஒரு ஸ்டிக்கர் ஓட்டுவாங்க. அது 6 மாசத்துக்கு valid. அது இல்லாத வண்டிக்கு Rs.50 to Rs.100 fine (hyderabad police, chennai police ஐ விட cheap தான்). இது கொஞ்சம் நல்ல முயர்ற்சியா தெரியுது தானே. அது மாதிரி சென்னை ல செய்யலாமே. ஒரு வாரம் கழிச்சி எல்லா வாகனங்களுக்கும் செக் பண்ணுவோம் நு எல்லா FM ளையும் அறிவிச்ச போதும். முக்கியமா நம்ம அரசு bus ஐ நல்லா கவனிப்பாங்க இல்ல. யாராவது உண்மையில்லையே இதை நடைமுறை படுத்துறவங்க கவனிப்பார்களா (என்னை மாதிரி வெட்டியா இல்லாதவங்க)? ஏன் இந்த IAS Officers, blogs எல்லாம் படிக்குறது இல்லை.